(அ.நிவேதா)

தொழில் துறையில் நிலவும் பாலியல் ரீதியான வன்முறைகளை தடுக்க, புதிய சட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும். அதற்கு  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் போன்ற அமைப்புக்களுடன்  ஏனைய அமைப்புக்களும் ஒன்றிணைந்து வரவேற்க வேண்டும் என்றார். 

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தொழிலாளர் உரிமை தொடர்பான கலந்துரையாடலில் இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி கலந்துக் கொண்ட பிரதிநிதிகளின் அக்கறையும் ஆர்வமும் மந்த நிலையில் உள்ளமை வருந்தத்தக்கது என தொழில் உலகின் வன்முறைக்கு எதிரான இயக்கத்தின் ஊடக பேச்சாளர் எஸ்.பி. நாதன் தெரிவித்தார். 

'தொழில் தளத்தில் பாலியல் வன்முறைகளை தடுக்க குரல் கொடுப்போம்" எனும் தொனிபொருளின் கீழ் மேற்படி அமைப்பினால் இன்று கொழும்பு ரேணுகா விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் தொழில் துறையில் பெண்கள், ஆண்கள் உட்பட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தொழில் துறையில் நிலவும் பாலிய ரீதியான வன்முறைகளை தடுக்க 2014ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு தொழிற் சங்கங்கள் பிரேரணைகளை முன்வைத்து வருகின்றன. 

அந்த வகையில் இம்முறை எமது நாட்டிலிருந்து சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தொழிலாளர் உரிமை தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்க ஜெனிவா சென்றிருந்த அரச தரப்பினர், முதலாளிமார் சம்மேளனம், தொழிலாள பிரதிநிதிகள் உள்ளடங்கிய மூன்று தரப்பினரும் எமது இயக்கத்தின் ஊடாக முன்வைத்த “சமவாய பிரதிநிதித்துவம்” பிரகடனம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். 

ஆனால் அவ்வாறு மக்கள் சார்பாக சென்று வந்தவர்கள் இன்று வரை நடந்த விடயங்களை ஊடகங்களின் ஊடாக மக்களிடம் கூற முன்வரவில்லை. இவர்களது இந்த  அலட்சிய போக்கு மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகவே உள்ளது. இருந்தபோதிலும் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட தவகல்களுக்கிணங்க தொழில் துறையில் நிலவும் பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும்,கொள்ளை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு  அதற்கான சட்டங்கள் அரசாங்கத்தின் ஊடாக அமுல்படுத்தபடலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

அவ்வாறு  சட்டங்கள் அமுலாக்கப்படுமாயின் இலங்கை அரசின் திறந்த பொருளாதார கொள்கைக்கு நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதற்காக இத்தகைய சட்டங்கள அமுலாக்கப்படுவதை அரசாங்கம் தடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்றார்.