இங்கிலாந்திற்கு எதிரான ஓருநாள் போட்டியில் 242 ஓட்டங்களால் தோற்றதே எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகவும் மோசமான நாள் என  அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியில் அனுபவமற்ற பந்து வீச்சாளர்களே இடம்பெற்றிருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் விளையாடிய போட்டிகளை கணக்கிட்டால் அவர்கள் 20 போட்டிகளில் கூட விளையாடியிருக்கமாட்டார்கள் என பெய்ன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களிடமிருந்து கிடைத்த அனுபவத்தை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அடுத்த போட்டிகளிற்கான உத்வேகமாகவும் பயன்படுத்தவேண்டும் என பெய்ன் தெரிவித்துள்ளார்.

உண்மையாகவே நாங்கள் அனுபவமற்ற பந்து வீச்சு அணியை கொண்டிருந்தோம் அது குறித்துசிந்திக்காமலிருப்பது முட்டாள்தனமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இது மோசமான விடயமாக தோன்றலாம் ஆனால்முன்னோக்கி செல்வதற்கு இது மிகவும் சாதகமான விடயமாக விளங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.