மாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்

Published By: Vishnu

20 Jun, 2018 | 04:44 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டமும் முயற்சியுமே சைட்டம் நிறுவனத்தை அரசாங்கம் கைவிடுவதற்கு காரணமாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஜெனரால் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

சைட்டம் தனியார் வைத்திய நிறுவனத்தை மூடவேண்டும் என மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டம்  இல்லாது அரசாங்கம் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுத்திருக்க முடியாது. 

இலவச வைத்திய சேவையினை பாதுகாக்கும் அதேநேரம் தனியார் வைத்திய நிறுவனங்கள் குறித்து சிந்தித்து செயற்பட  வேண்டும். சைட்டம் குறித்து சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றது. இதன்போது தகுதி புள்ளிகள் குறித்தும் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

இப்போது கொண்டுவரும் சட்ட திருத்தத்தில் நீக்க வேண்டிய சரத்துக்கள் உள்ளன. சைட்டம் அங்கீகாரம் இல்லாது போவது குறித்து எந்த திருத்தமும் இல்லை, சில விடயங்களில் நாம் இணங்க முடியாது. இலங்கை வைத்திய சபையின் அனுமதியுடனும் அங்கீகாரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும். 

சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சைட்டம் நிறுவன வைத்திய பீடம் என்பதை நீக்க வேண்டும். மேலும் முரண்பாடுகள் இல்லாத நிலையில் சகல மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29