தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு

Published By: Digital Desk 4

20 Jun, 2018 | 04:20 PM
image

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலை வேலைக்கு சென்ற நிலையில் மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினை சோடாவுடன் கலந்து வழங்கியதுடன், தானும் அதனை அருந்தியுள்ளார். இதன்போது இரண்டாவது மகனான 6 வயது சிறுவன் தனது பாட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா சோடாவுடன் ஏதோ கலந்து தந்துவிட்டார் எனத்தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவர்கள் நால்வரையும் மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 40 வயதான தாய் மற்றும்

12 வயது, 6 வயது, 1 1/2 வயது பிள்ளைகள் மூவரும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01