(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் போலவே மைத்திரி- ரணில் ஆட்சியிலும் குற்றவாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. மஹிந்தவுக்கு துணைபோன பாரிய ஊழல் மோசடிக்காரர்கள் பலரை அமைச்சரவையில் வைத்து அரசாங்கம் காப்பாற்றுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம் சுமத்தினார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலர்மீது உடனடியாக ஊழல் மோசடி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இன்று கொழும்பில் கலந்துகொண்ட நிகழ்வொன்றில்  கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.