வீதி விபத்தில் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் பலி 

Published By: Daya

20 Jun, 2018 | 02:25 PM
image

(இரோஷா வேலு) 

தெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜைகளான தாயும் மகளும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துகஹஹெதெக்ம வீதிக்கருகில் வைத்து கொட்டாவையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட வான் ஒன்று, இயந்திரகோளாறு காரணமாக வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது, வானில் பயணித்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளும் லொறியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகி நாகொட மற்றும் அல்லிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 37 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜையான கொலின் லுயிஸ்  மொனிக்கா மற்றும் அவரது மகளான நான்கு வயதுடைய கொலின் பொப் கப்ரியேலும் உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவத்தில்  காயமடைந்த மேலும் மூவரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58