(இரோஷா வேலு) 

ஹெரோயின் போதைப்பொருளுடன் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

ஹெரோயின் போதைப்பொருளுடன் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவலோக மைதானத்திற்கருகில் வைத்து வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 20 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன், 33 வயதுடைய சேதவத்தையைச் சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்பாஸ் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலை யில், இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளார். 

அதேபோல், வெலிகட ஒபேசகரபுர பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 48 வயதுடைய பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 7 கிராம் 720 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த சந்தேகநபரை நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்து பொலிஸார் நடவடிக்கை மேற் கொண்டிருந்தனர். 

மேலும் பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை

ஒன்றுக்கருகிலிருந்து 55 வயதுடை பெண்ணொருவரை கைதுசெய்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற் கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.