கொழும்பில் வீட்டு வேலைக்காக வந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு வீடோன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.