கபாலி திரைப்படத்தில் குமுதவள்ளியாக நடித்து அசத்தியவர் ராதிகா ஆப்தே, இவர் பாலிவுட் மற்றும் மராத்தி திரையுலகில் பிரபலமானவர் என்பது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் அவர் அண்மையில் செவ்வியொன்றை தன் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். அதில், படவாய்ப்புகளுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. சினிமா பின்புலன் இருக்கும் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகிறது.

அவர்களால் தான் நிலைத்து இருக்க முடியும். ஆனால் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். எந்த மாதிரியான படங்களில் நடிக்க கூடாது என நினைத்தேனோ அதில் நடிக்க வேண்டியதாயிற்று என்றார்.