இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியாவை விட பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதென தெரிவித்துள்ளது.

அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்கள் அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் காணப்படுகின்றன.

பாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானிலே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளில் மொத்தமாக 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் 14,935 ஏவுகணைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2010-ம் ஆண்டில் அமெரிக்கா, ரஷியாவில் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையால் அணு ஆயுதம் உற்பத்தி குறைந்தது எனவும் ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.