பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லவராயன் கட்டு பகுதியில் அமைந்துள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் நேற்று விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இந்த ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக போதியளவான மருந்துகள் இல்லாமையினால் அங்கு செல்லும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியதற்கிணங்கவே அவர் அங்கு சென்று நிலைமைகளை நேரடியாக அவதானித்தார்.

நிலைமைகளை பார்வையிட்ட அவர், நோயாளர்களின் நலனை கருத்திற் கொண்டு உடனடியாக மருந்து பொருட்களை வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்திடமிருந்து ஆயுள்வேத வைத்தியசாலைக்கு பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.