எகிப்திற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற ரஷ்யா 2 ஆவது சுற்றிறை அண்மிக்கிறது

Published By: Digital Desk 4

20 Jun, 2018 | 11:49 AM
image

2018 உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் எகிப்தை ரஸ்யா தோற்கடித்துள்ளதை தொடர்ந்து ரஸ்ய அணி இரண்டாம் சுற்றிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எகிப்துக்கு எதிராக செய்ன்ற் பீட்டர்ஸ்பேர்கில் நேற்று இரவு கடுமையாக மோதிக்கொள்ளப்பட்ட குழு ஏ உலகக் கிண்ணப் போட்டியில் 3 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற வரவேற்பு நாடான ரஷ்யா, இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாயிலை வெகுவாக அண்மித்துள்ளது.

எகிப்தும் ரஷ்யாவும் கடுமையாக மோதிக்கொண்ட இப் போட்டியின் முதலாவது பகுதியில் எந்த அணியும் கோல் போடாத நிலையில் இரண்டாவது பகுதியில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது.

போட்டியின் 47ஆவது நிமிடத்தில் ரோமன் ஸொப்னின் வேகமாக உதைத்த பந்து எகிப்து பின்கள வீரர் அஹ்மத் ஃபாதியின் பாதத்தில் பட்டு திசை திரும்பி அவரது சொந்த கோலினுள்ளேயெ செல்ல ரஷ்யா 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் போடப்பட்ட 5ஆவது சொந்த கோல் இதுவாகும்.

இந்த கோலினால் உத்வேகம் அடைந்த ரஷ்ய வீரர்கள் அதன் பின்னர் எகிப்து கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். மறுபுறத்தில் எகிபது அணியில் மீண்டும் இடம்பெற்ற மொஹமத் சாலாஹ் கோல் போடுவதற்கு எடுத்த பல முயற்சிகள் வீண் போயின.

தொடர்ந்து 3 நிமிட இடைவெளியில் ரஷ்யா இரண்டு கோல்களைப் போட எகிப்தின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

போட்டியின் 59ஆவது நிமிடத்தில் மரியோ பெர்னாண்டஸ் வலது புறத்திலிருந்து பரிமாறிய பந்தை டெனிஸ் செரிஷேவ் மிக வேகமாக உதைத்து கோலினுள்ளே புகுத்தினார். 

மூன்று நிமிடங்கள் கழித்து ரஷ்ய பின்கள வீரர் இலியா குட்டேபோவ் தனது எல்லையிலிருந்து உயர்த்தி உதைத்த பந்தை எகிப்து பெனல்டி எல்லையில் தன் பாதத்தில் கட்டுப்படுத்திய ஆர்ட்டெம் டிஸியுபா மிக அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

உபாதை காரணமாக முதலாவது போட்டியைத் தவிர்த்து இரண்டாவது போட்டிக்கு மீள் வருகை தந்த மொஹமத் சாலாஹ் 73ஆவது நிமிடத்தில் பெனல்டி கோல் ஒன்றைப் போட்டார். ஆனால் எகிப்தின் மீட்சிக்கு அது போதுமானதாக அமையவி்லை. 

உலகக் கிண்ண வரலாற்றில் எகிப்து சார்பாக கோல் போட்ட மூன்றாவது வீரர் சாலாஹ் ஆவார். இதற்கு முன்னர் 1930இல் ஆப்டெல்ரஹ்மான் பௌசியும் (2 கோல்கள்), மெக்தி ஆபெத் எல் கானியும் (1990) எகிப்து சார்பாக உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் போட்டவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31