‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார் சி.வி.குமார்.

அட்டக்கத்தி, பீட்ஸா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என  குறைந்த செலவில் படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் சி வி குமார். இவர்  சந்திப் கிஷன் நடிப்பில் தயாரான ‘மாயவன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் உயர்ந்தார். 

இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 4G என்ற படமும், வைபவ் நடிக்கும் “டைட்டானிக் காதலும் கவுந்து போகும்” என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான பணிகளை இன்று தொடங்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஹரி தஃபூசியா என்பவர் இசையமைக்கிறார்.