பொகவந்தலாவ - கொட்டியாகலை தோட்டபகுதியில்  சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐவரை பொகவந்தலாவ பொலிஸார்  நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.டி.கே.சி.தர்மபிரிய தலைமையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்,  54 பைகளையும், மாணிக்கல் இல்லவகைகளும் பொகவந்தலாவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வினால் பொகவனை தோட்ட தேயிலை மரங்களும் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.