வவுனியா பிரதேச செயலகத்தில் எந்தவித இடமாற்றங்களும் வழங்கப்படாது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 16 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவது தகவல் அறியும் சட்டம் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. 

வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பதவிக் காலம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட நிலையில் தகவல் அதிகாரியால் வழங்கப்பட்ட தகவலின் மூலமே இவை தெரியவந்துள்ளது.

குறித்த 16 உத்தியோகத்தர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எந்தவித இடமாற்றமும் வழங்கப்படாத நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருகின்றனர்.