ஆலை­ய­டி­வேம்பு, பெரியகளப்பு காணிப் பிரச்­சி­னையை சமூகப் பிரச்­சி­னை­யாக உருமாற்றி தமிழ், சிங்­கள மற்றும் முஸ்லிம் இனங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தை விதைக்க வேண்டாம் என அம்­பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் பொதுமக்­க­ளி­டமும் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அம்­பாறை மாவட்டம் ஆலை­ய­டி­வேம்பு, பெரிய­க­ளப்பு காணிப்­பி­ரச்­சினை தொடர்பில் நேற்று முன்­தினம் ஏற்­பட்ட நிலைமை குறித்து கருத்து தெரிவிக்­கும்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்­கையில்,

பெரிய­க­ளப்பு பிர­தே­சத்தில் வேலி­யிட முற்­பட்ட முஸ்­லிம்கள் சிலரை தமி­ழர்கள் தாக்­கி­ய­தாக சில அர­சி­யல்­வா­தி­களின் முக­நூலில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அக்­க­ருத்து முற்­றிலும் தவ­றா­னது. முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல களப்பில் வேலி­யிடும் அனை­வ­ரையும் தற்­போது பொது­மக்கள் தடுத்து வரு­கின்­றனர்.

ஆலை­ய­டி­வேம்பு, பெரிய­க­ளப்பு பிர­தேசம் நீரி­யல்­வள திணைக்­க­ளத்­துக்­கு­ரி­யது என அத்­தி­ணைக்­களம் அண்­மையில் பகி­ரங்க பெயர்ப்­ப­ல­கையை நாட்­டி­யது. இந்­நி­லையில் சில தினங்­க­ளுக்கு முன்னர் களப்பு பிர­தே­சத்தை பாது­காத்துத் தரு­மாறு பல்­வேறு அமைப்­புக்­களும் போராட்­டத்தில் ஈடு­பட்­டன. அப்­போ­ராட்­ட­மா­னது களப்பை ஆக்­கி­ர­மித்­துள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­னதே தவிர தனியே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னதல்ல என்­பது அனை­வரும் அறிந்த விடயம். 

ஆனால் இப்­பி­ரச்­சி­னையை சில அர­சி­யல்­வா­திகள் தமது அர­சியல் இலா­பத்­த்துக்காக தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­யாக மாற்ற முற்­ப­டு­கின்­றனர். எனவே இவ்வாறான வீண் வார்த்­தை­களை பரப்பி மக்களை குழப்ப வேண்டாம் என்றார்.