தெற்கு அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 65 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும் 4 வயதுடைய குழந்தை ஒன்றுமே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.