சந்திமாலுக்கு ஒரு போட்டித் தடை ; 100 வீத போட்டிக் கட்டண அபராதம்

Published By: Vishnu

20 Jun, 2018 | 07:55 AM
image

பந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐ.சி.சி) ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் போட்டிக் கட்டணத்தில் 100 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்கு அமைய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு விளையாட முடியாது.

சம்பவம் தொடர்பான காட்சிகளைப் பார்வையிட்டபோது சந்திமால் செயற்கை பதார்த்த்தைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியமை தெளிவாகின்றது என போட்டி பொது மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

சந்திமாலின் வாயில் இருந்த ஒருவகை இனிப்பில் சாலிவா என்ற பதார்த்தம் உமிழ்நீருடன் கலந்ததாகவும் இது ஐ.சி.சி. ஒழுக்கக் கோவையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநாத் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விசாரணையின்போது இலங்கை அணி முகாமைத்துவத்தினர் மற்றும் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் வீடியோ காட்சிகள் காட்டப்பட்டது. இந்த விசாரணையின்போது தனது வாயில் ஏதோ ஒன்றைப் போட்டதாகவும் அது என்னவென்று நினைவுகூற முடியாதுள்ளதாகவும் சந்திமால் ஒப்புக்கொண்டதாக ஐ.சி. சி. யின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்ன்ற் லூசியாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது சந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக மத்தியஸ்தர்களான இயன் கல்ட், அலிம் தார் ஆகியோர் முறைப்பாடு் செய்ததுடன் காணொளிகளை பார்வையிடவேண்டும் எனவும் பொது மத்தியஸ்தர் ஸ்ரீநாத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தொலைக்காட்சி காணொளிகளைக் கொண்டு மத்தியஸ்தர்கள் எடுத்த தீர்மானத்தை ஐ.சி.சி முழுமையாக ஆதரிப்பதாகவும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் இதனைப் பின்பற்றுவதாகவும் ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் மைதானத்துக்குள் வராததன் மூலம்  கிரிக்கெட்டின் மகத்துவத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சந்திமால், பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, அணி முகாமையாளர் அசன்க குருசின்ஹ ஆகியோர் இரண்டிலிருந்து நான்கு டெஸ்ட் போட்டிகள்வரை தடையை எதிர்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09