ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று வாரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இங்கிலாந்தின் நொட்ங்ஹேம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழட்சியில் வெற்றிப்பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணி விரர்களின் பந்துகளை துவம்சம் செய்தது.

இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 481 என்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பட்டத்தில் ஜே.எம் பேர்ஸ்டோ 139 ஓட்டங்களையும், ஏ.டி. ஹெல்ஸ் 147 ஓட்டங்களையும், ஜே.ஜே. ரோய் 87 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.