போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான் என்ற நபரே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடையில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் அவரை கைதுசெய்துள்ளதுடன் வீட்டிலிருந்து கைக்குண்டுகளையும் மீட்டுள்ளனர்.

இன்று கைதுசெய்யப்பட்டவர் 2014 இல் சுட்டுக்கொல்லப்பட்ட பேலியகொட நகரசபை உறுப்பினர் சமிலசந்தருவனின் சகோதரர் என தெரிவித்துள்ள பொலிஸார் சமீபத்தில் விசேட அதிரடிப்படையினருடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐஸ் மஞ்சுவின் போட்டிக்குழுவை சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.