(கலைச்செல்வன்)

அடுத்த 6 மாதங்களுக்குள் பசிபிக் பெருங்கடலில், 'எல் நினோ' உருவாக்கத்திற்கான  மாற்றங்கள் தென்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த தேசிய கடல் மற்றும் சூழல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

எல் நினோ என்பது இரண்டிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக பெருவின் கடல் கரையோரத்தில் வரும் சூடேறிய நீரோட்டமே சுறுக்கமாக எல்நினோ எனப்படுகிறது.

இவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அப்பகுதி மட்டும்மின்றி உலகலாவிய ரீதியில் பல பிரச்சினைகள் ஏற்பட கூடுமென அமெரிக்க உலக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் பக்க விளைவாக ஒன்று, மழை கொட்டி வெள்ள சேதம் ஏற்படும், அல்லது ,கடும் வறட்சி நிலவி பஞ்சம் ஏற்படும். இவ்விரு மோசமான தாக்கங்களையும் எல் நினோ ஏற்படுத்தக்கூடியது .