(நா.தினுஷா) 

கிரிவெஹர விகாராதிபதி மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தனிப்பட்ட பழிவாங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கதிர்காமம் கிரிவெஹார விகாராதிபதி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் தனிப்பட்ட பழிவாங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகும். இதனை காரணம் காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

எனினும் இது தனிப்பட்ட பழிவாங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரது ஆட்சிகாலத்தில் ஏற்பட்டதை போன்று தேசிய பாதுகாப்புக்கு இது பாதிப்பினை செலுத்தவில்லை என்பதையும் அவர் கருத்திற் கொள்ள வேண்டும்.

2012 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஒரு விகாராதிபதி வெட்டிக்கொலை செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அதனை விட இதுவொன்றும் கொடூரமான விடயமல்ல என்றார்.