பாதுக்க, வக பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் இரு சடலங்களை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 68 வயது தாய் மற்றும் 38 வயது மகளின் சடலங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன. 

குறித்த இருவரின் சடலங்களும் அவர்களது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதோடு நான்கு மாத சிசு ஒன்றையும் பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளனர்

இவ்வாறு மீட்கப்பட்ட நான்கு மாத சிசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு இச் சம்பவம் கொலையென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 மேலும் குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.