முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை  எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர், கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து கடந்த நவம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.