ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு கல்வி அமைச்சினால் கெளரவிப்பு

Published By: Digital Desk 4

20 Jun, 2018 | 10:44 AM
image

(எம். சில்வெஸ்டர்)

18 வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்‍கை சார்பாக பதக்கம் வென்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வின்போது கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்தினால் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது 

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் அனைத்து வகையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கவென 400 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் அதன் எதிர்காலத்தில் எமது நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த முடியும் எனவும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜப்பானில் இம் மாத முற்பகுதியில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்..

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றிய 13 வீர, வீராங்கனைகளுக்கும் கல்வி அமைச்சினால் பணப்பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் அவர்கள் 13 பேருக்கும் இரண்டு வருடங்களுக்கான மாதாந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் உறுதி வழங்கினார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம், “ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வெற்றி பெற்று எமது தாய் நாட்டுக்கு புகழீட்டிக்கொடுத்தவர்கள் குறித்து பெருமை அடைகின்றேன். நீங்கள் உங்களது சக்தி, அர்ப்பணிப்புத்தன்மை, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டு எமது தாய் நாட்டை பதக்கங்களால் ஜொலிக்கச் செய்தீர்கள். உங்களது வெற்றியின் பின்னணியில் இருப்பவர்கள் பயிற்றுநர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோராவர்’ என்றார்.

ஆசிய கனிஷ்ட விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும், பங்குபற்றிய ஏனைய வீர வீராங்கனைகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாவும் கல்வி அமைச்சரினால் வழங்கப்பட்டது. மேலும், அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்கு 2,000 ரூபா மாதாந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உறுதி வழங்கினார்.

இலங்கைக்கு பதக்கம் வென்று கொடுத்தவர்களை பயிற்றுவித்த பயிற்றுநர்கள், பயிற்றுவிப்புத்துறை தொடர்பில் தங்களது திறமை மற்றும் அறிவுத்திறனை வளர்த்தெடுப்பதற்கான வெளிநாட்டு புலமைப் பரிசில்களும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டன.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு போட்டி சாதனையுடன் 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் அடங்கலாக 9 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடித்தது. இதுவே ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் இலங்கையின் சிறந்த பெறுபேறாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07