(இரோஷா வேலு) 

அலுத்வெல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரொருவர் நேற்றுமுன்தினம் பகல் கொஸ்லந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெல பிரதேசத்தில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பளவில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரொருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் 20 வயதுடைய அம்பேகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோதமான முறையில் பூக்கன்றுகள் என்ற போர்வையில் இவ்வாறு கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளார். 

இதன்போது, எட்டுப்பாத்திகளில் பயிரிடப்பட்டிருந்த 8000 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை இன்னும் சில வாரங்களில் வெட்டுவதற்கு ஆயத்தமாக காணப்பட்ட நிலையிலேயே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும் இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞரை நேற்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.