(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

அர்ஜூன் அலோசியஸிடமிருந்து கோப் குழுவின் ஐந்து பேர் பணம் பெற்றுள்ளனர். அவர்களில் இருவரின் பெயர் வெளிவந்துள்ளது. இன்னும் சில நாட்களில் மூவரது பெயர் வெளிவரும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அர்ஜூன் அலோசியஸிடமிருந்து கோப் குழுவின் ஐந்து பேர் பணம் வாங்கியுள்ளனர். அவர்களில் இருவரின் பெயர் வெளிவந்துள்ளது. இன்னும் சில நாட்களில் மூவரது பெயர் வெளிவரும். 

இதன்படி கம்பஹா,  களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்புப்பட்டுள்ளனர். அதன் விபரம் விரைவில் வெளிவரும். அதேபோன்று கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவின் மகனும் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுள்ளார். 

ஆகவே அலோசியஸிடமிருந்து பணம் பெற்றவர்களை சபாநாயகர் கரு ஜயசூரிய உடனடியாக கோப்குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.