(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துவது தொடர்பான முக்கியமான கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மாகாண சபை தேர்தல் தொடர்ந்து தாமதமாகுவது தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துவது தொடர்பான முக்கியமான கட்சி தலைவர்கள் கூட்டம் நாளைமறுதினம் வியாழக்கிழமை நட‍ைபெறவுள்ளது. இதன்போது மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியையும் பிரதமரையும் அமைச்சர் பைஸர் முஸ்தபா சந்தித்து அதன் முடிவினை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்வைப்பார் என்றும் கூறினார்.