(எம்.மனோசித்ரா)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போதே இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் தொடர்பில் பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக் தெளிவுபடுத்தியதுடன் தேசிய அரசியலில் பேசப்பட்டு வருகின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் பிரித்தானிய வர்த்தக கொள்கைகள் தொடர்கான இராஜாங்க அமைச்சர் கிரேக் ஹேன்ஸ் மற்றும் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன ஆகியோரையும் பிரதமர் இவ் விஜயத்தின்போது சந்தித்தும் கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.