26 குர்திஷ் போராளிகளை தாக்கியழித்த துருக்கி 

Published By: Digital Desk 4

19 Jun, 2018 | 01:47 PM
image

ஈராகின் வடபகுதி மற்றும் துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 குர்திஷ் போராளிகள் பலியாகியுள்ளனர்.

ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளவாறு. துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், குர்திஸ்தான் பயங்கரவாத குழுக்கள் முகாம்கள் அமைத்துள்ள, தென்கிழக்கு துருக்கியின் தியார்பகிர், சிர்னாக் மாகாணங்கள் மற்றும் வடக்கு ஈராக்கின் அவாசின் - பாஸ்யான் பகுதிகளில் துருக்கி விமானப்படையினர் கடந்த 17 மற்றும் 18-ம் திகதிகளில் வான் தாக்குதல் மேற்கொண்டர்.

இதில், சுமார் 26 குர்திஷ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என துருக்கி ராணுவம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதிகளின் முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் மற்றும் வெடிமருந்துகளும் இந்த தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47