அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் வைத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எம்து செய்தியாளர் தெரிவித்தார்.

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீதே குறித்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு கலைப்பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் பொரளை ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு வழியா சென்று அங்கிருந்து பாராளுமன்றம் நோக்கி நகர்ந்த நிலையில் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் வைத்து ஆர்ப்பட்டக்கார்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.