சண்டிகார் நகரின் பல்சோரா பகுதியில் வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவர், தனது 4 குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாட விட்டுவிட்டு, வீடுகளுக்கு வேலை செய்ய கிழம்பி விட்டார்.  

குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது பூங்காவில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், அந்த குழந்தைகளின் அருகில் வந்து குரைத்தபடி கடிக்க முயன்றன. உடனே 3 குழந்தைகள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

ஒன்றரை வயதான குழந்தையால் எழுந்து ஓட முடியவில்லை. நாய்கள் சுற்றி வளைத்து கடித்ததில் அந்த குழந்தை படுகாயம் அடைந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக  அருகிலிருந்த அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு குழந்தையை  பரிசோதித்த வைத்தியர்கள் , குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.