மத்­திய பிர­தேச மாநி­லத்தின் போபால் நகரை சேர்ந்­த 55 வயதான மருத்துவர், தனது 45 வய­தான மனைவி மற்றும் இரண்டு பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வந்­துள்ளார். இந்த நிலையில், கடந்­த­வாரம் தனது வீட்டில் மருத்­துவர் கொலை செய்யப்­பட்டு சட­ல­மாகக் கிடந்துள்ளார். 

அவ­ரது வீட்டிலிருந்த மனைவி மற்றும் பிள்­ளைகள் ஓர் அறையில் பூட்­டப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர். 

வீட்டில் பொருட்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டதால் இது கொள்­ளை­யர்­களின் கைவ­ரிசை என முதலில்  பொலிஸார் சந்­தே­கித்­துள்­ளனர். 

இந்தக் கொலை குறித்து மருத்துவரின் மனை­வியிடம் பொலிஸார் நடத்­திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முர­ணாக பதில­ளித்­துள்ளார். இதில் சந்­தே­க­ம­டைந்த பொலிஸார் அவ­ரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மருத்துவர் கொலையில் மிகப்­பெ­ரிய சதி நடந்துள்­ள­தாக கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

மேலும், மருத்­துவர் தான் வேலை செய்யும் மருத்­து­வ­ம­னையில் தாதியர் வேலை தரு­வ­தாகக் கூறி இளம்­பெண்­களை வேலைக்கு வைத்­துள்­ள­துடன், அவர்­க­ளுடன் பாலியல் உற­விலும் ஈடு­பட்டு வந்­துள்ளார். 

மேலும், தன்­னு­ட­னான உற­வுக்கு மறுப்பு தெரி­விக்கும் பெண்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தியும் வந்­துள்ளார்.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் மருத்துவரின் உற­வி­ன­ரான இளம்பெண்­ணொ­ரு­வரை பல தடவை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதில், அவர் கர்ப்­ப­மானார். பின்னர் அந்தச் சம்­பவம் மூடி மறைக்­கப்­பட்­டுள்­ளது.

அது மட்­டு­மல்­லாமல், தனது மகள் என்றும் பாராமல் சொந்த மக­ளி­டமே பாலியல் சில்­மி­ஷத்தில் ஈடு­பட்­டுள்ளார்.

இவ்­வாறு மருத்துவர் தினமும் பல பெண்­க­ளுடன் பாலியல் உறவு கொள்­வதும் அல்­லது பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வ­து­மான  பாலியல் தொல்­லைகள் அதி­க­ரித்து வந்­ததால், அவர் மனைவி, மன­மு­டைந்து போயுள்ளார். 

இந்தப்  பாலியல் தொல்­லைக்கு முடிவு  கட்­ட­வேண்டும் என நினைத்த மனைவி, அவ­ரது தோழியின் கணவரின் உத­வி­யுடன், கூலிப்­ப­டை­யி­னரை அழைத்து மருத்துவரான தனது கண­வ­ரின் ஆணுறுப்பை அறுத்து எறி­யும்­ப­டியும் அதற்கு 10 ஆயிரம் இந்­திய ரூபா தரு­வ­தா­கவும் பேரம் பேசி­யுள்ளார். 

இதன்படி, மருத்துவரை கொலை செய்து விடும்­படி கூலிப்ப­டை­யி­ன­ரிடம் தோழியின் கணவர் தெரி­வித்துள்ளார்.

அதன்­படி, சம்­ப­வத்­தன்று வீட்­டுக்குள் புகுந்த கூலி­ப்ப­டை­யினர், மருத்­துவரின் ஆணு­றுப்பை துண்­டித்து எறிந்­த­துடன், அவரை  பல இடங்­களில் கத்­தியால் குத்தி கொலை செய்­துள்­ளனர். 

இந்தச் சம்­பவம், கொள்­ளை­யர்­களின் கைவ­ரிசை என சந்­தே­கிக்­கப்­பட்­டது. ஆனால், தீவிர விசா­ர­ணையின் போது, திட்­ட­மிட்ட சதி என்­பதை மருத்­துவரின் மனைவி தெரி­வித்­துள்ளார்.

இதை­ய­டுத்து, மருத்­துவரின் மனைவி அவரது தோழி மற்றும் தோழியின் கணவர் உட்பட  கூலிப்படையினர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும்  இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் தேடி வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.