சவுதி அரேபியா நாட்டின் கால்பந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானத்தில் திடீரென எற்பட்ட தீ விபத்தில் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்..

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவும் பங்கேற்றுள்ளது. 

ஆரம்ப ஆட்டத்தில் ரஷ்யாவுடன் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோல்வியடைந்தது. இந்த நிலையில், அடுத்த போட்டியில் உருகுவேவிற்கு எதிராக விலையாடவுள்ளனர். நாளை நடைபெற உள்ள இப்போட்டியில் பங்கேற்க சவுதி வீரர்கள் ஆயத்தமாகி வருகிறனர்.

ரஷ்யாவின் எயார்பஸ் ஏ319 ரக விமானத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து ரோஸ்டோவ்-ஆன்-டன் நகருக்கு அவர்கள் விமானத்தில் நேற்று பயணித்தபோது, விமானம் தரையிறங்கிய நேரத்தில் இயந்திரத்தில் தீ பற்றியது. 

இதையடுத்து அவசரமாக வீரர்கள் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் பறவை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.