"அனைத்து பிக்குகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்"

Published By: Vishnu

19 Jun, 2018 | 11:23 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி  தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி  ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பினை வழங்குவதற்கு அனைத்து பிக்குகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என தேசிய புத்திஜீவிகள் பிக்குகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இவ்விடயம் தொடர்பில் அச் சங்கத்தினர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த மத கோட்பாடுகளுக்கு நாட்டின் பொது சட்டம் முரணாகவே காணப்படுகின்றது. மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் மத சித்தாந்தங்களுக்கு அமைய   சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லையெனினல் எதிர்காலத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை போல் பல தேரர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இராணுவத்தினருக்கு எதிராக இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தமையினால் தண்டிக்கப்பட்ட ஞானசார தேரர் மத சட்டங்களை பின்பற்றியே கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் இவ்விடயம் சட்டத்தின் பார்வையில் பாரிய குற்றமாகவே காணப்பட்டது.

இந் நிலையில் சிறையில் ஞானசார தேரரை சக கைதிகளை போன்று  நடத்த சிறைசாலை அதிகாரிகள் முற்படுவது பௌத்த மதத்தினை அவமதிப்பதாகவே காணப்படுகின்றது. துறவு வாழ்க்கையினை மேற்கொள்ளும் தேரர்களின் சிறப்பு அடையாளமாக காணப்படும் காவியினை  கலைக்க முற்படுவது மதத்தின் புனித தன்மையிற்கு புறம்பான செயற்பாடாகும்.

எனவே நாட்டின் பொது சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் சில திருத்தங்களை தற்போதைய தேவைக்கிணங்க மாற்றியமைக்க வேண்டும்.

மேலும் ஜனாதிபதி  தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி  ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பினை வழங்குவதற்கு அனைத்து பிக்குகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50