அமெரிக்காசின் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான டுவெய்ன் ஒன்ஃரொய் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஒன்ஃரொய் 20 வயது. பிளோரிடா பகுதியை சேர்ந்த இவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டசியன் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார். 

இவர் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பில்ட் கடற்கரையில் உள்ள இருசக்கர வாகன கடைக்கு சென்றபோது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.