மாத்தளை, பலாபத்வள நில்திய உயன பிரதேசத்தில் நேற்று(18-06-2019) இரவு 11.45 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகியதினால்  ஏற்பட்ட விபத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். 

இவ்விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மேற்படி விபத்திற்கான காரணம், கார் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமாக இருக்கலாமென தெரிவித்த மாத்தளை பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.