மல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு - ம.உ.ஆ.குழு

Published By: Vishnu

19 Jun, 2018 | 08:37 AM
image

மல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடை சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர். இதனால் அவர்கள் கூறிய விடயத்திற்கும் பதிவு செய்யப்பட்ட விடயத்திற்குமிடையில் முரண்பாடுகள் காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து நாம் தமிழ் மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை மேற்கொண்டிருந்தோம் என மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இத் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக நேரில் சென்று சகல விடயங்களையும் அவதானித்து தேவையான தகவல்களை சேகரித்துள்ளோம். குறிப்பாக கொல்லப்பட்ட நபரது உறவினர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றிருக்கின்றோம்.

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டதான குழுக்களிற்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடமும் தகவல்களை பெற்றுள்ளோம். இதன்போது நாம் உடனடியாக ஓர் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அதாவது தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்தவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர். இதனால் அவர்கள் கூறிய விடயத்திற்கும் பதிவு செய்யப்பட்ட விடயத்திற்குமிடையில் முரண்பாடு காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து நாம் தமிழ் மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை மேற்கொண்டிருந்தோம். அதேபோன்று இச் சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட பொது மக்களது சாட்சியங்களை தெல்லிப்பழை பொலிஸார் பதிவு செய்திருக்கவில்லை. எனவே நேரில் கண்ட பொது மக்களது சாட்சியங்களையும் பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தோம்.

இவை தவிர சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் தான் வெளியே சென்றமை, துப்பாக்கிகளை எடுத்து சென்றமை தொடர்பான விடயங்களை தகவல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளாரா என்பது தொடர்பாகவும் தகவல்களை பெற்றுள்ளோம்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக மேலதிகமான நடவடிக்கைகள் , பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பன தொடர்பாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39