பன்னிரெண்டு வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் மீண்டும் விளையாட தகுதிபெற்ற சுவீடன், சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்ற குழு எவ் போட்டியில் தென் கொரியாவை பெனல்டி கோல் மூலம் வெற்றிகொண்டது.

நிஸ்னி நொவ்கோரொட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியில் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பைப் பெற்ற பின்னரே தென் கோரியாவுக்கு பெனல்டியை ஸ்லோவேக்கிய மத்திஸ்தர் அகிலார் ஜோயல் வழங்கினார்.

சுவீடன் வீரர் விக்டர் க்ளேசனை தென் கொரிய வீரர் கிம் வூ வீழ்த்தியதை அடுத்து வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பு கோரப்பட்டதால் ஆட்டம் சற்று நேரம் தடைப்பட்டது.

இதனை அடுத்து போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனல்டியை சுவீடன் அணித் தலைவர் அண்ட்றியாஸ் க்ரான்க்விஸ்ட் இலக்கு தவறாமல் கோலினுள் லாவகமாக புகுத்தினார்.

இந்த வெற்றியை அடுத்து குழு எவ்வில் முதலாம் கட்டப் போட்டிகளின் நிறைவில் 3 புள்ளிகளுடன் மெக்சிகோவுடன் முதலாம் இடத்தை சுவீடன் பகிர்ந்துள்ளது.

இக் குழுவில் தலா ஒரு தோல்வியைத் தழுவிய தென் கொரியாவும் ஜேர்மனியும் புள்ளிகள் இன்றி அடுத்த போட்டிகளை நெருக்கடியுடன் எதிர்கொள்ளவுள்ளன.

போட்டியின் முதலாவது பகுதியில் சுவீடனின் மார்க்கஸ் பேர்க்குக்கு கோல் போட கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு தென் கொரிய வீரர் சோவினால் திசை திருப்பப்பட்டது. தென் கொரியாவினால் கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் போனது.

உலகக் கிண்ண வரலாற்றில் தனது சொந்த நாட்டில் 1958இல் ஆரம்பப் போட்டியில் ஈட்டிய வெற்றியின் பின்னர் சுவீடன் ஈட்டிய முதலாவது ஆரம்பப் போட்டி வெற்றி இதுவாகும். கடந்த ஏழு உலகக் கிண்ண அத்தியாயங்களில் 

தனது ஒன்பதாவது தொடர்ச்சியான உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடும் தென் கொரியாவுக்கு இப் போட்டி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

முதலாம் கட்ட முடிவில் குழு எவ் அணிகள் நிலை

அணி        போ வெ தோ பு

மெக்சிகோ 1 1 0 0 3

சுவீடன்         1 1 0 0 3

ஜேர்மனி         1 0 0 1 0

தென் கொரியா 1 0 0 1 0

(போ: போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி,  பு புள்ளிகள்)

(என்.வீ.ஏ.)