யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம்,  மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ஐவரையும் இன்று மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது வழக்கினை விசாரித்த மாவட்ட நீதவான் நீதிபதி அலெக்ஸ் ராஜா குறித்த ஐவரையும் எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற  துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.