மல்லாகதில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞனின்  உடல் உடற்கூராய்வின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபரது உடலின் பின் பகுதியூடாக சுவாசப்பையை துப்பாக்கிக்குண்டானது துளைத்து உடலின் முன் பகுதியால் சென்றமையால் ஏற்பட்ட குருதி பெருக்கே மரணம் நிகழ காரணமாகியுள்ளது.

நேற்றைய தினம் மல்லாகம் சகாயமாதா தேவாலயத்தின் முன் பொலிஸார் நடாத்திய துப்பாக்கி சூட்டில் மல்லாகத்தை சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது உடலானது 24 மணி நேரங்களின் பின்னர் பிரேத பரிசோதனை முடிவடைந்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இப் பிரேத பரிசோதனை அறிக்கையிலேயே மேற்படி மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.