இன்புளுவன்சாவினால் 20 சிறுவர்கள் உயிரிழப்பு

Published By: Vishnu

18 Jun, 2018 | 04:50 PM
image

(நா.தினுஷா) 

தென்மாகாணத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பபா பாலியவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில், 

மே மாதம் முதல் தற்போது வரை 20 சிறுவர்கள் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இவ்வாறு உயிரழந்துள்ள சிறுவர்களில் 10 பேர் இருதயத்தில் துளை, மூலை வளர்ச்சி குறைவு, அங்கவீனமான மற்றும் வெவ்வேறான நோய்காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என கண்டறிப்பட்டுள்ளது. 

ஆகவே இவ்வாறான சிறுவர்களுக்கு விரைவில் இன்புளுவன்சா நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனினும் தற்போது தென்மாகாணத்தில் இன்புளுவன்சா தொற்றுநோய் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் இன்புளுவன்சா பரவுவதற்கான வாய்ப்பில்லை. இருப்பினும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்புளுவன்சா தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதால் அம் மாகாணத்தில் முழுமையாக வைரஸ் தொற்று பரவுவதை குறைப்பதற்கான எச்சரிக்கையும் வைத்திய ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38