யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்  தொடர்பில்  ஆராய்வதற்காக யாழ். மாவட்ட  மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மனித உரிமை ஆணையாளர் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட நபரின் உறவினர்களிடமும், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமும் சம்பவம் தொடா்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டார்.

மல்லாகம் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்த நிலையில்  இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொர்பில் ஐந்து சந்தேக நபா்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புள்ள செய்திகளுக்கு யாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

                                                  யாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது ! பதற்றம் தொடர்கிறது

                                                  மல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது