உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரமானது தற்போது குப்பை மேடாக மாறிவருகின்றது.

 

8,848 மீட்டர் நீளம் கொண்ட எவரெஸ்ட் சிகரமான நேபாளத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இச் சிகரத்தில் ஏறுவதற்காக நூற்றுக்கணக்கான மலையேறும் வீரர்கள் வருகின்றனர். 

இவ்வாறு மலையேறும் வீரர்கள் விட்டுச் செல்கின்ற அவர்களது கூடாரங்கள், கேஸ் சிலிண்டர்கள், மிகுதி உணவுகள், குடிநீர் போத்தல்கள் மற்றும் மனிதக் கழிவுகள் என்பவற்றினால் ஏவரெஸ்ட் சிகரேமே குப்பை மேடாக மாற ஆரம்பித்துள்ளது. 

மலையேறுபவர்களுக்கு உதவும் வீரர்களை ஷெர்பா என்று நேபாளத்தில் அழைப்பர் பெம்பா தோர்ஜே என்ற ஷெர்பா ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், 

எவரெஸ்ட் சிகரம் ஏற வருவோருக்கு இதுவரை 18 முறை உதவியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அங்கே விட்டுச் செல்லும் கழிவுகளைக் காணும்போது சகிக்கமுடியவில்லை.

மலையேறும் வீரர்கள் கீழே இறங்கும்போது சிகரத்திலிருந்து 8 கிலோ கழிவுகளை கீழே கொண்டு வந்தால், அவர்களது மலையேற்ற கட்டணம் மீள அளிக்கப்படும் என்று நேபாள அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி, 2017 அம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் 25 டன் குப்பைகள், 15 டன் மனிதக் கழிவுகளை அடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர்.

முன்னதாக மலையேற்ற வீரர்களே, மலையேற்றத்துக்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தனர். ஆனால் தற்போது ஷெர்பாக்கள், அந்தப் பொருட்களைச் சுமந்து செல்வதுடன் திரும்பும்போது அவர்களே கூடாரம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து விடுகின்றனர். இதனால் ஷெர்பாக்களால் மலை உச்சியிலிருந்து கழிவுகளை சுமந்து வர முடிவதில்லை என்றார்.