ஜப்பானின் மேற்குப் பகுதியான ஒசாக்காவில் 6.1 ரிச்டர் அளவில் பாரிய பூமியதிர்வு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

பூமியதிர்வில் சிக்கி 9 வயது சிறுமி உட்பட  3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.