இலங்கை அணித்தலைவர் மீது ஐ.சி.சி குற்றச்சாட்டு

Published By: Digital Desk 4

18 Jun, 2018 | 11:03 AM
image

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கிரிக்கெட் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 253 ஓட்டங்களைப்பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் தொடர்ந்து தனது முதல் ஆட்டத்தைத் தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த நிலையில் இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை வெடித்தது. 2 ஆவது நாள் போட்டி தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த நடுவர்கள் அலீம் தாரும், இயான் கவுல்டும் பந்தை மர்மபொருளால் தேய்த்து இருப்பதற்கான அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

இந்த தகவலை இலங்கை அணியினருக்கு தெரிவித்த நடுவர்கள் 3 ஆவது நாள் போட்டிக்கு முன்பாக வேறு பந்து பயன்படுத்தப்படும் என்று கூறினர்.

இதனால் அதிருப்தி அடைந்த இலங்கை வீரர்கள் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் களம் இறங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடுவர்கள் மைதானத்திற்கு வந்த போது கூட, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறையிலேயே அமர்ந்து இருந்தனர். போட்டி நடுவர் ஸ்ரீநாத், இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹத்துருசிங்க, அசன்க குருசிங்க, அணித்தலைவர் தினேஸ் சந்திமல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

2 மணி நேரத்திற்கு பின் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து விளையாட சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும் பந்தை சேதப்படுத்தியதற்காக இலங்கை அணி மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மேற்கிந்திய தீவுகளுக்கு 5 ஓட்டங்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘எங்களது வீரர்கள் எந்த தவறும் செய்யவில்லை என அணி நிர்வாகம் உறுதிப்பட மறுத்துள்ளது. ஆதாரமில்லாத எந்த குற்றச்சாட்டையும் கூறினால் வீரர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்’ என அதில் குற்ப்பிடப்பட்டுள்ளது. 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் தொடரில் 300 ஓட்டங்களைப்பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பதிவில், இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமல் மீது ஐ.சி.சி. நடத்தை விதிமுறையை மீறி பந்தின் தன்மையை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போட்டியின் முடிவில் சந்திமலுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்னாபிரிக்க  அணித்தலைவர் டு பிளிசிசிஸ், அவுஸ்திரேலிய அணித்தலைவர்  ஸ்டீவன் சுமித் ஆகியோர் ஏற்கனவே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07