ஆப்கானிஸ்தானின் அரசாங்க படைகளுக்கும் தலிபானிய குழுக்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ரமழான் பண்டிகைக்கா தலிபானிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தானின் அரசாங்க படைகளும் மூன்று நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் ரமழான் பண்டிககை முடிவடைந்ததனால் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. 

எனினும் அடுத்த 10 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிப்பதாக தெரிவித்த ஆப்கான் அரசாங்கம், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

இதன்போது அசாதாரண நிகழ்வாக போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோது தலிபானியர்கள் அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியதுடன், பொதுமக்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்ட‍மை குறிப்பிடத்தக்கது.