வடக்கு மாகாண சபைத் தேர்­தலின் போது வீணைச் சின்­னத்தில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நானே களமி­றங்­குவேன் என்று ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள ஈ.பி.டி.பியின் அலு­வ­ல­கத்தில் நேற்­று­முன்­தினம் மாலை  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் வினாக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில்,

தமிழ் மக்­களின் நல­னுக்­காக வடக்கு மாகாண சபை தேர்­தலில் நான் போட்­டி­யிட வேண்­டி­யுள்­ளது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆட்­சியில் உள்ள வடக்கு மாகாண சபை­யினால் தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யான எதையும் செய்­து­கொ­டுக்க முடி­ய­வில்லை. 

இதனால் நான் அடுத்த மாகாண சபைத் தேர்­தலின் போது வீணைச் சின்­னத்தில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­வுள்ளேன். அடுத்த வடக்கு மாகாண அரசு ஈ.பி.டி.பி.யின் ஆட்­சியின் கீழ் வந்தால் அடுத்து வரும் 4 வரு­டங்­க­ளுக்குள் வடக்கில் தேனும் பாலும் ஓடும். இதனால் தமிழ் மக்கள் ஈ.பி.டி.பி.க்கு ஆத­ரவை தேர்­தலில் வழங்க வேண்டும். 

 தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இரு அணி­யாக பிரிந்து நின்று வடக்கு மாகாண சபைத் தேர்­தலை எதிர்கொள்­ளு­மாக இருந்தால் நானே அடுத்த வடக்கு மாகாண முத­ல­மைச்சர் என்று பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்­னி­டத்தில் தெரி­வித்­துள்­ளனர் என்றார்.