யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியிலேயே இச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மரண விசாரணையொன்றுக்காக பொலிஸார் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் இரு இளைஞர் குழுவினருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த மோதல் தொடர்பில் அவ்வழியால் சென்ற பொலிஸார் பொலிஸார் தலையிட்டு விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து மோதல் முற்றிய நிலையில் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிப்பிரயோகத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவர் எழாலை பகுதியைச் சேர்ந்த 28 பாக்கியராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.