பிரேஸில் எதிர் சுவிட்சர்லாந்து 

Published By: Vishnu

17 Jun, 2018 | 07:11 PM
image

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தின் நான்காம் நாளான இன்று பரபரப்பான மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் ரொஸ்டொவ் ஒன் டொன் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டி முக்கியம் பெறுகின்றது. இப் போட்டியில் விளையாடவுள்ள  ஏழு வீரர்கள் ஒன்பது வருடங்களின் பின்னர் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

நைஜீரியாவில் 2009 இல் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு பிரேஸிலை முதல் சுற்றுடன்  சுவிட்சர்லாந்து அணியில் இடம்பெற்ற மத்தியகள வீரர்களான க்ரானிட் ஸாக்கா, ரிக்கார்டோ ரொட்றிகூஸ், முன்கள வீரஹெரிஸ் செவேரோவிக் ஆகியோர் தற்போதைய அணியில் இடம்பெறுகின்றனர்.

இதேவேளை 9 வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த அணியில் இடம்பெற்ற கோல்காப்பாளர் அலிசன், மத்திய கள வீரர்களான கெசேமிரோ, பிலிப்பே கூட்டின்ஹோ, முன்கள வீரர் நேமார் ஆகியோர் தற்போதைய பிரேஸில் அணியில் இடம்பெறுகின்றனர்.

அன்று சுவிட்சர்லாந்திடம் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்ய இவர்கள் நால்வரும் இன்றைய போட்டியில் முயற்சிக்கவுள்ள அதேவேளை, மீண்டும் பிரேஸிலுக்கு அதிர்ச்சி கொடுக்க சுவிட்சர்லாந்து காத்திருக்கின்றது.

தரப்படுத்தலில் 2இம் இடத்தில் பிரேஸிலும் 6ஆம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக இன்றைய போட்டி இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். ஆனால் எட்டு தடவைகள் சிநேகபூர்வ போட்டிகளில் 3 க்கு 2 என்ற ஆட்டக் கணக்கில் பிரேஸில் முன்னிலை வகிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35